பல்துறை வித்தகன் உழவனே!

பல்துறை வித்தகன் உழவனே!

விவசாயத்தை கையிலெடு
நோயின்றி
உடல்நலம் பெற்று
நீண்டு வாழ்வாய்
உணர்த்திட்ட வைத்தியனும்
உழவனே!

பசளை இடு
தண்ணீர் கொடு
அரவணைத்திடு
விதை விருட்ஷமாகும்
நிரூபித்த பெற்றோரும்
உழவனே!

காலத்தை கணக்கிடு
பயிரை நட்டுவிடு
நேரத்திற்கு செய்துவிடு
அறுவடையும் ஆறாய் பெருகும்
வகுத்திட்ட கணக்காளன்
உழவனே!

துன்பத்திலும்
இன்பம் காண
சுவையோடு பாடல் பாடி
நாட்டுப்பாடல்களை
நமக்களித்த ஆசானும்
உழவனே!

தனக்குள்ளே சட்டம்  வகுத்து
காவல் வேலியும் அமைத்து
சஞ்சலிக்கும் போதெல்லாம்
சமாதானம் செய்து கொள்ளும்
சத்தியம் உள்ள நீதவானும்
உழவனே!

நல் நாள் பார்த்து
சடங்குகள் செய்து
சம்பிரதாயங்கள் நிறைவேற்றி
தன்னம்பிக்கை கொள்ளும்
சாந்தமுள்ள சோதிடனும்
உழவனே!

பல்துறை வியாபித்து
நல் காரியம் செய்து
கடவுளர்களாய்
கண்முன்னே காட்சி தரும்
உத்தம உழவர்களை
போற்றி துதிப்போம்!

15.01.2020

கருத்துகள் இல்லை