நல்லதம்பி நல்லா படிச்சிருக்கான்

நல்லதம்பி நல்லா படிசிருக்கான்
நடை உடை நல்லா இருக்கும்
நாலுபேரு முன்னிலையில்
நல்லாத்தான் பேசுவான்
நம்பி இருக்காங்க சனம்!

வாடா போடா
நாயே பேயே
வயது பதவி மூர்ப்பெல்லாம்  இல்ல
வாய்க்கு வந்ததெல்லாம் பேச்சுதானாம்
வாய் பொத்தி நிற்குதூகளாம் நம்பிய சனம்

கருத்து சொன்னா
கடுமுடுப்பு அதிகம்
கெடுபிடியும் சேர்ந்து வரும்
பட்டவன் பாவம் என்கிறான்
கேட்டவன் கேலி செய்கிறான்

குதறுவதும் குரைப்பதும்
குடித்தனத்துக்கு உதவாது தம்பி
துள்ளின மாடு பொதி சுமக்கும்
சும்மா சொல்ல இல்லை
சுமக்கும் போது தெரியும்.

17.12.2019

கருத்துகள் இல்லை