அ(இ)ப்போ வீ(றோ)ட்டில

#அ(இ)ப்போ வீ(றோ)ட்டில

அப்போ...

வீட்டு முன்னே
பட்டறை

கைகுத்து
அரிசி

வேலியில்
நாட,
பயற்றை,
சுரை...

வயலிலே
திராய்,
பொன்னாங்காணி...

காட்டில 
இலை,
காய், கனி....

அரிசி, தவிடு,
நிறுகஞ்சி, பழஞ்சோறு,
குரக்கன், உழுந்து,
வரகு, வண்டு,
பயறு, இறுங்கு,
மீன், இறைச்சி
நீண்டுகொண்டு போகும்
நாளாந்த உணவு..

பஞ்சமெண்டா
பட்டறை விரிப்பு
பாதிப்புற்றவர்களுக்கு
நெல்லும் கொடுப்பு
எல்லாம் வீட்டிலதான்... 

#இப்போ....

வீட்டில அடைபட்டா
சோத்துக்கும்  வழியில்லை
சோம்பேறிகள் ஆகி
சோதனையும் கூட
ஒவ்வொன்றுக்கும் 
ஒவ்வொருவரில் தங்கல்
சங்கலி தொடர்..

அரிசி, ஆகாரம்
தடி, தண்ணீர்
கூட்டம்,  கும்மாளம்
றோட்டிலதான்...

கருத்துகள் இல்லை