நுண்ணுயிரின் அழைப்பு

#நுண்ணுயிரின்  அழைப்பு#

அஞ்சா நெஞ்சம்
விறைத்த மண்டை
வீராப்பு பேச்சு
ஒழிந்து நிற்கு!

தலைக்கணம்
மண்டையோடு
தாறுமாறான செயல்
மறைந்து நிற்கு!

விண்கலப் பரிசோதனை
அணுகுண்டு தயாரிப்பு
ஆயுத பரிமாற்றம்
பயந்து நிற்கு!

அக்கிரமம்
அகங்காரம்
ஆத்திரம்
நடுங்கி நிற்கு!

வாரும்
காரும்
நுண்ணுயிரின்  அழைப்பு
இடமே வெட்ட வெளி...

கருத்துகள் இல்லை