கொல்லனுலையூரே

அன்னமும் ஆடும்
இயற்கையும் ஈசனும்
உண்மையும் ஊக்கமும்
எட்டிசைக்கும் ஏற்றமுள்ளவூர்

ஒலியும் ஓசையும்
கற்பும் காளியும்
பெண்ணும் பேச்சியும்
பெருமைகொள் பேரூர்

கல்லும் கானகமும்
மணலும் மாடும்
பருப்பும் பாலும்
செழித்திடும் சேய்யூர்

வயலும் வாய்க்காலும்
பனையும் பாதையும்
குளமும் கூக்குரலும்
அழகு கொடுக்கும் ஆரம்பவூர்

பள்ளியும் பாடமும்
நடிப்பும் நாடகமும்
பொறுமையும் போட்டியும்
உயர்ந்து நிற்கும் ஊர்

கலையும் காட்சியும்
பண்பாடும் பாரம்பரியமும்
கொள்கையும் கோட்பாடும்
வளர்த்திட்ட வானவூர்

விவசாயமும் வீச்சும்
செங்கல்லும் சேனையும்
உழைப்புக்கு ஊதியம்
நீட்டிட்ட நுலையூர்

பண்பும் பாசமும்
நெகிழ்ச்சியும் நேர்மையும்
அமைதியும் ஆனந்தமும்
கேட்டிட்டவூர் கொல்லனுலையூரே



கருத்துகள் இல்லை