கொள்ளை கூட்டங்கள்

கொள்ளை கூட்டங்கள்

றோட்டுக்கு போக ஏலா
சொந்தங்களோட பேசிட ஏலா
சுகதுக்கங்களில் கலந்திட ஏலா
கைகளை கொடுத்திட ஏலா
ஆடம்பரமா வாழ்ந்திட ஏலா

வீட்டிலையும் தள்ளித்தான்
வீதியிலையும் தள்ளித்தான்
மைதானத்திலும் தள்ளித்தான்
மயானத்திலும் தள்ளித்தான்
மதத்தலங்களிலும் தள்ளித்தான்


சோற்றுக்கும் வழியில்லை
சொந்த உழைப்பும் இல்லை
மந்திரமும் கேட்பதில்லை
மனதுக்கு நிம்மதியுமில்லை

இருப்பதை கொடுத்திடுவோம்
இரந்தாவது கொடுத்திடுவோம்
இல்லாதவர்களுக்கும் கொடுத்திடுவோம்
இரக்கத்தையும் கொடுத்திடுவோம்
நினைக்குதுகள் நல் மனங்கள்!

சாவதெல்லாம் சாகட்டும்
வாடுவதெல்லாம் வாடட்டும்
வாய்த்ததை வாய்ப்பாக்கி
விலை ஏற்றியே விற்று
செல்வந்தன் ஆகிட துடிக்கும்
மாபாவிகளை என்னவென்று அழைப்பது?

கருத்துகள் இல்லை