கறுப்பாய் தெரிந்தவன் காலனோ?

கறுப்பாய் தெரிந்தவன்
காலனோ?

வண்ணத்து பூச்சி மொச்சி
தேன் உறிஞ்ச
பூங்குழல் மங்கையவள்
மனமகிழ்ந்து நிற்க
தூரத்தில் நின்ற தும்பிகளும்
சுழன்றடித்து
மின்னிய வளையல்களில்
மொய்த்து இருக்க
காலை பொழுது மாலையானதே!

சனநெரிசல்
இடையிடையே இரும்பு கோபுரம்
கீழ் இருந்து மேல்நோக்கி
கறுப்பாய் என்னமோ ஒன்று
வட்டமாயும்,
நீட்டாகவும் பூட்டியிருக்கு
காட்சி, பேச்சு
அலையாய் வீச்சு
காற்றிலாதானாம்!

வட்டமிட்ட வண்ணத்து
சுழன்ற தும்பி
பறந்த, மொய்த்த இடங்களில்
ஈக்கள் மொய்த்திருக்கு
கறுப்பாய் தெரிந்தவன்
காலனோ?

கருத்துகள் இல்லை