இயந்திர உலகு என்பான்

#இயந்திர உலகு என்பான்...

இயந்திர உலகு என்பான்
இருந்திட முடியாதென்பான்

இல்லமும் இருக்கு என்பாள்
இரைச்சலாய் பேசிடுவான்
மறுபேச்சு பேசாள்.

இயந்திர உலகு என்பான்
இருந்திட முடியாதென்பான்


இங்க என்பாள்
வாறேன் என்பான்
வந்திடான்.

இயந்திர உலகு என்பான்
இருந்திட முடியாதென்பான்

எங்க என்பாள்
வேலை என்பான்
நிறுத்திடுவான்.

இயந்திர உலகு என்பான்
இருந்திட முடியாதென்பான்

எட்டிப்பார்ப்பாள்
இருள்சூழ்ந்துவிடும்
எங்கே என்பாள்
வந்திட்டன் என்பான்

இயந்திர உலகு என்பான்
இருந்திட முடியாதென்பான்

உணவு என்பாள்
போடு என்பான்
உறங்கிடுவான்

இயந்திர உலகு என்பான்
இருந்திட முடியாதென்பான்

களைப்பில்லை
காலை தொடங்கி
தூங்கும் வரை
வேலைதான் செய்கிறாள்
வேலை இல்லை என்கிறாள்

வீட்டில்தான் இருக்கிறான்
விறைத்துதான் பார்க்கிறான்
வராவ என்கிறான்
வேலை இல்லை என்கிறாள்

என்ன வேண்டும் என்கிறாள்
கேட்பதை கொடுக்கிறாள்
சலித்தது இல்லை

கருத்துகள் இல்லை